மாபெரும் பொங்கல் விழா 2020 | Grand Pongal Festival 2020

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா பெண்டில் ஹில் சிவிக் பூங்காவில் இன்று 19 ஜனவரி 2020 காலை 7.00 முதல் நடைபெறும்.
எமது சங்கத்தின் பொங்கல் விழாவுக்கு திருமதி. ஜோடி மெக்கே அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி….
இம்முறையும் சிட்னியிலுள்ள ஏனைய பழைய சங்களுடன் இணைந்த மாபெரும் பொங்கலுடன் ஆரம்பிக்கும் விழா தொடர்ந்து தமிழ் பாரம்பரியத்தினை தழுவிய கலை கலாச்சார நிகழ்வுகளாக நாட்டுபுற நடனம்,வில்லுப்பாட்டு சங்கீதப் பாடல்கள்,சிறப்புச் சொற்பொழிவு , தவில் – நாதஸ்வரக் கச்சேரி, உறி அடித்தல் , சிலம்பாட்டம், பறை இசை மற்றும் இன்இசை நிகழ்சிகள் பலவும் நடைபெறவுள்ளன.
உணவு விற்பனை நிலையங்களும் ஒழுங்கமைக்கபட்டுள்ளது.,
அத்துடன் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.
அனுமதி இலவசம்