கீதவாணி 2026 - Album 04.02 -Honorary Awards
கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
நிகழ்ச்சியின் ஒரு சிறப்பு அங்கமாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், கீதவாணியின் கர்த்தாவுமான பேராசிரியர் அம்பிகைராஜா அவர்களின் நீண்டகால சேவையையும், கல்விப் புலமையையும், சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில் சிறப்பு கௌரவ விருது வழங்கப்பட்டது.
BSc (Eng), PhD, FIET, CEng, FIEAust, CPEng, SMIEEE உள்ளிட்ட பல்வேறு உயரிய கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளைத் தனது பெயருக்குப் பின்னால் கொண்டிருக்கும் பேராசிரியர் அம்பிகைராஜா அவர்கள், அண்மையில் அவுஸ்திரேலியாவின் உயரிய தேசிய கௌரவங்களில் ஒன்றான Order of Australia விருதையும் பெற்று, தமிழ் சமூகத்திற்கும் யாழ் இந்து சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இத்தனை பெருமைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான பேராசிரியர் அம்பிகைராஜா அவர்களை கௌரவிப்பதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி கிளை பெருமிதம் கொள்கிறது.
https://www.youtube.com/watch?v=1HllHMOVmHs
© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited
For the full album, click here Back to gallery