கீதவாணி 2026 : Album 07 🎶
JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாக YOUTH CATEGORY இறுதிப்போட்டி இடம்பெற்றது. பத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கீதவாணிக்கு முன்னதாக நடைபெற்ற நேரடி திறன் தேர்வின் மூலம் அபிராமி நரேந்திரநாதன் , உமையாள் ஜனகன், மற்றும் அபிநயன் ராஜ்குமார் ஆகியோர் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபிராமி நரேந்திரநாதன் வெற்றியாளராகத் தெரிவானார். 🏆
வெற்றியாளர் மட்டுமன்றி, ஏனைய இரண்டு இறுதிப்போட்டியாளர்களும் மிகச் சிறப்பாகப் பாடி, இப்போட்டியின் தரத்தை மேலும் உயர்த்தியிருந்தனர். போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 👏🎤 இப்போட்டிக்கான அனுசரணையை வழங்கிய CIVIC PARK MEDICAL CENTRE வைத்தியர் பரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
For the full album, click here Back to gallery