சிட்னி தமிழர் தைப்பொங்கல் பெருவிழா 2024 | Sydney Tamil Pongal Festival 2024

ஒசுத்திரேலிய வரலாற்றிலே முதன் முறையாக வீதியை மூடி தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தமிழர்கள் மற்றும் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் செறிவாக இருக்கின்ற மேற்கு சிட்னியின், பென்டில் கில் நகரத்தில், 80ற்கும் மேற்பட்ட சிட்னி தமிழ் அமைப்புகளும், வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா!