திருமுறைப் பயிற்சிப் பட்டறை | Training Workshop

சைவத்தினையும் தமிழினையும் தாய் மண்ணில் வளர்க்க உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிட்னி பழைய மாணவர் சங்கத்தினர், புலம்பெயர் மண்ணிலும் அதன் நோக்கங்களை வியாபிக்கும் நோக்குடன், இரண்டு நாள் திருமுறைப் பயிற்சிப் பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர்.
இந்த பட்டறையில் ஓதுவார் திருமறைக்காடு திரு சிவகுமார் சொக்கநாதன் அவர்கள் திருமுறை பண்ணிசை குறித்த விளக்கங்கள் வழங்குவார்கள்.
அடியார்கள் இதில் பங்குபற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இளம் சமூகத்தினர் முதல் பெரியோர்களும் பங்கு பற்றலாம்.
இடம்: துங்காவி சனசமூக நிலையம்
காலம்: மார்ச் 12,13 மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை
திருமுறைகள்: தெரிந்தெடுத்த வாழ்வியல் வழிகாட்டும் திருமுறைகள்
ஓதுவார் : திருமறைக்காடு சிவகுமார் சொக்கநாதன்
அனுமதி: இலவசம்